கோவைக் குறள்

நாயது வாளை அளந்தாலும் இந்நாட்டில்

நோயதன் காலம் அறி.

(1)

அறிவுடையார் ஈனும் மொழிகள்; அறியார்

அறிவது மேன்மைக்கு வித்து.

(2)

குணக்குன்று ஈங்குக் குறுகிடில் எங்கும்

மணக்கின்ற பூவது பாழ்.

(3)

காமத்தால் சாகுமே காதல்; இலையாயின்

காரணத்தால் நீளும் அது.

(4)

சொல்லும் செயலும் ஒருமித்தால் – நல்வாழ்க்கை

தானாய் அமைந்து விடும்.

(5)

இருளில் ஒளிசிறி தானாலும் – உள்ளில்

பெருவெளியைக் காட்டி விடும்.

(6)

பொருளுடன் நல்லறமும் சேர்ந்தாலே – வாழ்க்கை

பெருமை உடையது காண்.

(7)

அறத்தோடு அன்புடைமை சேர்ந்தாலே – வாழ்க்கை

புறத்தார்க்கும் இன்பம் தரும்.

(8)

பற்றுதல் இல்லாத வாழ்க்கை – பரணேறி

வெற்றாகி வேண்டாத தாம்.

(9)

வயிற்றுக் குணவில்லா போழ்தும் சிறிதும்

வறுமையில் லையென்றே சொல்.

(10)

எடுப்பார் விடுப்பது வானால், உலகில்

வறுமை விடைபெற் றிடும்.

(11)

நல்லோரென் றும்தீயோ ராகார், நவில்தொறும்

நூல்நயம் நன்றுணர்ந் தோர்.

(12)

கற்புடையோர் காப்பில் குறைபட நேரிடின்

நற்கள மாகா துலகு.

(13)

மறுவாழ்வு ஈடேறா நாட்டில் ஒருபோழ்தும்

வாழ்வதை விட்டு விலகு.

(14)

நீரின் றமையா உலகம்போல், இல்லாள்

இனிமையே நல்வீடு பேறு.

(15)

படிப்பினும் நன்னூல் படிப்பீர்; இலையாயின்

புண்நூல் படியா திரு.

(16)

யாதொரு தீயவை செய்திடினும் – தீயவன்

நாதொறும் நேயம் கெடும்.

(17)

பயனிலாச் சொல்லெல்லாம் சொல்லற்க - சொல்லின்

நயமோடு ஊரேற்கச் சொல்.

(18)

வறியார்க்கு ஈயாத ஈகை – பிறர்க்குச்

செறித்தாலும் சேரா துடைத்து.

(19)

பிறன்கேடு யாவர்க்கும் செய்யற்க - செய்யின்

அறக்கேடு தானாய்க் கெடும்.

(20)

ஊற்று வராகேணி பாழாம் – உழவிட்டு

நாற்று நடாத பயிர்.

(21)

சினமிலா வாழ்வொடு வாழ்ந்திடினும் - இல்லோர்

மனமொத்து வாழ்தல் சிறப்பு.

(22)

நீரில்லா நெற்பயிர் நீளாது வாடுமே

ஈரமே இல்லா மனம்.

(23)

பழுக்கா துதிர்ந்த தளிரது வானாலும்

புண்விழும் பட்ட விடத்து.

(24)

அவித்து உலர்த்திய நெல்லேயா னாலும்

உமிநீக்கிக் கொள்ளல் தகும்.

(25)

எல்லோர்க்கும் வேண்டும் பணிவுடைமை – அஃதில்லார்

எல்லோர்க்கும் தீண்டோரா வார்.

(26)

கூவுவது கோழியே யானாலும் – நாவது

சீவாத சொல்லுங் கெடும்.

(27)

இருள்நீக்கி வாழ்வாங்கு வாழ்ந்தாலும் - மேலோர்

அருள்நீக்கின் வாழா தவர்.

(28)

சமன்தூக்கா கோலில் நிறுத்தாலும் – சான்றோர்

சிறுமை பெறுவது இல்.

(29)

தகவில்லார் தக்கா ரெனினும் – புகழிலார்முன்

தக்கார் தகவிலா தார்.

(30)

தேராது யாரையும் தேறற்க – தேர்ந்தபின்

சேரா திருப்பது பாழ்.

(31)

புறம்பேசா நல்லோர்முன் எல்லோரும் - நாட்டில்

அறம்பேசி வாழ்தல் சிறப்பு.

(32)

குற்றம் புரிந்துநீங்கி  நல்வாழ்வான் வாழ்வெலாம்

சற்றும் இலையே உயர்வு.

(33)

சிறைநலம் பேணாத சின்னாள்வாழ் வெல்லாம்

திரைமறை வாழ்வும் கெடும்.

(34)

சேற்றில் நடவாமல் சேர்த்த பெருஞ்செல்வம்

நல்நாற்றை நாடா வயல்.

(35)

நனவினால் உண்டாகா இன்பம், கனவினால்

நல்கினால் வாழ்க்கையே பொய்.

(36)

தீயவை செய்திடினும் நல்லவையே நாடுவது

சான்றோர்க் கமைந்த சிறப்பு.

(37)

வேட்டுவன் வெட்டிடும் நீள்மரமே யானாலும்

தந்திடும்மாந் தர்க்கு நிழல்.

(38)

அறிவிலார்செய் தீயவை யாவும் அறிவுடையோர்

காப்பதேசான் றான்மைக் கழகு.

(39)

செப்புமவ னும்சிந்தை நோகா தகன்றினும்

தப்பு மவனும்நல் உத்தமன் தான்.

(40)

அறமல்ல வாராது இன்பம் – புறத்தான்

அறமேவ துன்பம் விரட்டு.

(41)

இல்வாழ்வான் வாழா துறவுநாடின் – பல்காலும்

சேர்த்த புகழெல்லாம் பாழ்.

(42)

யாவர்க்கும் யாதொரு தீங்கிழையா இல்வாழ்வான்

போங்கால் நிலைக்கும் புகழ்.

(43)

ஒன்றிட வாழ்வதே நல்வாழ்க்கை மற்றெல்லாம்

எஞ்ஞான்றும் வாழ்க்கை யில.

(44)

தானாய்த் திருந்தாமல் நாமாய்த் திருத்துவது

கல்லிடம் சொல்லும் கதை.

(45)

பயணத்தில் இன்பமது நல்குமாயின் – யாவன்

பயணிப்ப தென்பதை நல்கு.

(46)

அறமுடையார் தீவினை ஏற்றாலும் - நல்வினை

யாவும் அறமுடையோர் வித்து.

(47)

விருதுகளுக் காகவேவாழ் கின்றவர்க்கு – வேராய்

விழுதாகி நிற்பர் சிலர்.

(48)

கொள்வதாலுண் டாகும் பயனெதுவா னாலும்

கொடுப்பதா லோங்கல் சிறப்பு.

(49)

கோடி கொடுத்துக் கொடிபிடித்தா லும்அங்குச்

சூடிக்கொள் ளாததே மாண்பு.

(50)

கொடுக்கற்ற தேளாய் வலம்வந்திட் டாலும்

நடுக்கமுற் றோடல் இயல்பு.

(51)

வஞ்சினம் பேசும் வரம்பில்லா நாக்காயின்

நஞ்சினை உற்றார்க்கே தரும்.

(52)

வஞ்சினம் பேசாத நாக்கு வலிமைதான்

தஞ்சம் புகாத வரை.

(53)

வேராகி ஊர்ந்து விளைச்சல்கள் தந்தாலும்

சீராக நில்லாதின் வீண்.

(54)

நீர்நிறை கொண்டிட்டு நேர்கொண்டு சென்றாலும்

சார்நிறை இல்லையேல் வீண்.

(55)

கொடுஞ்சிறையும் இன்பமாய்க் கொண்டவன் நெஞ்சம்

வடுப்படாது வாழும் உலகு.

(56)

வன்சொல் வதுவையால் கேளாத போழ்துனது

இல்வாழ்க்கை என்றென்றும் புகழ்.

(57)

வதுவை அமைவதுநாம் செய்தவினை யல்லாது

தானாய் அமைவதுதான் சீர்.

(58)

போற்றி வளர்த்தாலும் போருக்குப் போனபின்

ஊரார்க் குறுவதே சீர்.

(59)

முகநகை இல்லாது பொன்நகை இட்டால்

சுகம்தராது போகுமேவாழ்க் கை.

(60)

ஒருகுடைக் கீழ்வளர்ந்த சீராள ரானாலும்

மறுகுடை நாடாது வாழ்.

(61)

புகைவது பொய்யாய் அமைந்தால் பயனில்லை

பூக்கா நெருப்பைப் போல்.

(62)

குறைகூறும் முன்னொரு வேளைக் கரைந்தால்

குறையேதும் கூறா திரு.

(63)

சுற்றிவந்த சுற்றத்தைச் சூழ்ச்சியின்றி ஏற்றாலும்

நற்பற்றில் லாதிருப்பின் நீங்கு.

(64)

விரலளவு கொண்டொரு மோதிரங் கொண்டாலும்

பாராது விட்டால் இழப்பு.

(65)

சத்துக் குறையா திருக்கும் எதுவுமே

நித்தம் கொளலே சிறப்பு.

(66)

கோடிகோடி ஊதியம் பெற்றாலும் வாழ்வில்லை

நாடுவோர்க்கு ஈய்வதே சால்பு.

(67)

வேண்டுதல் வேண்டும் பொழுது கிடைத்தாலே

வேண்டுத லில்லை சிறப்பு.

(68)

ஐந்தைந்து மாதமாய்ச் சீர்சிறை வாழ்க்கையே

தூயதாய் நிற்கும் உறவு.

(69)

ஓயாத ஆன்மீகப் பேச்சதுதா னாலுமஃதில்

சாயாத பேரருளே சால்பு.

(70)

கல்லாது காலம் கடத்தினாலும் கற்றாரைச்

சேர்ந்து ஒழுகின் சிறப்பு.

(71)

கோயிலில்லா ஊரிலும் வாழலாம் – வாழாதே

சான்றோர் இலாத விடத்து.

(72)

இல்லாள்வார் சொல்லும் ஒருசொல்லே வாகினும்

நல்லார்சொல் ஒப்ப துடைத்து.

(73)

நட்புகொள வந்தவ ரெப்பெரியோ ராகினும்

புல்லறிவா ளர்நாடா தார்.

(74)

தன்னை யறியாது தன்னறிவைத் தானேற்றின்

என்ன பயனு மில.

(75)

வாழை இருகால மீனாது போலவே

ஏழை இரப்பது ஆம்.

(76)

தீநெறிக்கு அஞ்சிவாழ்த லென்பது யாவர்க்கும்

தீவழிக்கு உண்டாகும் தீர்ப்பு.

(77)

ஆக்கை நயத்தால் அறியலாமோ; கற்றாரை

வாக்கு நயத்தாலல் லாது.

(78)

நாடுதல் இன்றியெவர் வாழ்வாரே யாயினும்

கூடுதல வர்மாட் டிலை.

(79)

நாட்டாமை இன்றி எவரொருவர் தீர்ப்பாலும்

மங்கா திருப்ப தழகு.

(80)

உயர்வதும் தாழ்வதும் யாதொருவன் பெற்ற

அறிவுமறி வின்மையே யாம்.

(81)

கசடறக்கற் றாலும்எஞ் ஞான்றும் அதனைப்

பிசகாது ஓதுவது சால்பு.

(82)

ஒருவர்க் கொருவர் உதவிடாத  நட்பு

சிறப்பிடம் என்றும் இல.

(83)

தனையறிவர் யென்றுசாற்றும் யாவராயின் – பூவுலகில்

தன்னை அறியா தவர்.

(84)

ஊட்டியூட்டி பேணிய பாகனே யானாலும்

சாட்டின் மிதிக்கும் களிறு.

(85)

உடற்குறை யோடெவரும் வாழ்வாங்கு வாழின்

மனக்குறைவாய் வாழ்தலா காது.

(86)

யாவர்க்கும் யாதுமின்றி வாழ்வதைக் காட்டிலும்

பூவுலகில் சாவதே மேல்.

(87)

முகம்சுளிக்கப் பேசியவர் தன்னுறவை நாடின்

அகம்செழிக்க ஏற்பது சால்பு.

(88)

பாய்ச்சாத கேணிநீர் வீணா வதைப்போல்

எவர்க்குமே ஊற்றாத கூழ்.

(89)

மனையாட்டி இல்லாத எப்பெரிய வீடும்

நினையா திருக்கும் உலகு.

(90)

ஓடாத வண்டி ஒதுக்கிட் டிருந்தாலும்

சக்கரம்ப யன்படும் காண்.

(91)

முதியோர் ஒதுங்கி உறையும்வீட் டில்யாரும்

வீட்டின்பம் காணா தவர்.

(92)

ஊருக்குள் வாராது ஊர்ப்புறம்யார் வாழ்ந்தாலும்

ஊருக்கே அச்சவர் காண்.

(93)

எவரிடமும் ஏட்டில் எழுதிக்காட் டாகுழந்தை

தாயிடம் காட்டா தில.

(94)

பிழைப்பூ தியம்வாங்கும் ஊழியர்எஞ் ஞான்றும்

பிழைக்கவழி யில்லா தவர்.

(95)

சிலம்புகழி நோன்பேற்ற பெண்ணவ ளானாலும்

மாறாது தொட்டில் இடம்.

(96)

மார்பில் உதைத்த குழந்தைதான் என்றாலும்

சார்ந்தபின் சாரா திரு.

(97)

நிமிர்ந்த முதுகும் தலையும் குனியுமே

வாயில் சிறுத்த விடத்து.

(98)

குறுகிய சாலையில் வேகம் விவேகமல்ல

நீர்க்கும் பயணமது காண்.

(99)

பகல்பொழுதில் சுட்டெரித் தாலும் அறையின்

இருளை விரட்டி விடு.

(100)

கருத்துகள்