இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவைக் குறள்

நாயது வாளை அளந்தாலும் இந்நாட்டில் நோயதன் காலம் அறி. (1) அறிவுடையார் ஈனும் மொழிகள்; அறியார் அறிவது மேன்மைக்கு வித்து. (2) குணக்குன்று ஈங்குக் குறுகிடில் எங்கும் மணக்கின்ற பூவது பாழ். (3) காமத்தால் சாகுமே காதல்; இலையாயின் காரணத்தால் நீளும் அது. (4) சொல்லும் செயலும் ஒருமித்தால் – நல்வாழ்க்கை தானாய் அமைந்து விடும். (5) இருளில் ஒளிசிறி தானாலும் – உள்ளில் பெருவெளியைக் காட்டி விடும். (6) பொருளுடன் நல்லறமும் சேர்ந்தாலே – வாழ்க்கை பெருமை உடையது காண். (7) அறத்தோடு அன்புடைமை சேர்ந்தாலே – வாழ்க்கை புறத்தார்க்கும் இன்பம் தரும். (8) பற்றுதல் இல்லாத வாழ்க்கை – பரணேறி வெற்றாகி வேண்டாத தாம். (9) வயிற்றுக் குணவில்லா போழ்தும் சிறிதும் வறுமையில் லையென்றே சொல். (10) எடுப்பார் விடுப்பது வானால், உலகில் வறுமை விடைபெற் றிடும். (11) நல்லோரென் றும்தீயோ ராகார், நவில்தொறும் நூல்நயம் நன்றுணர்ந் தோர். (12) கற்புடையோர் காப்பில் குறைபட நேரிடின் நற்கள மாகா துலகு. (13) மறுவாழ்வு ஈடேறா நாட்டில் ஒருபோழ்தும் வாழ்வதை விட்டு விலகு. (14) நீரின் றமையா உலகம்போல், இல்லாள் இனிமையே நல்வீடு பேறு. (15) படிப்பினும் நன்னூல் படிப்பீர்;...